தனியார் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ராமன்-II எஞ்சின் விரைவில் சோதனை…

இந்திய தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், ராமன் ராக்கெட் எஞ்சினின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. ராமன்-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எஞ்சின் ராமனிம் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

ராமன் எஞ்சின் என்பது கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த பைப்ரோபெல்லன்ட் ராக்கெட் எஞ்சின் ஆகும். இந்த எஞ்சின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளது. நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனின் பெயரால் இந்த எஞ்சின் அழைக்கப்படுகிறது.

இந்த எஞ்கின் 2020ல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட முதல் தனியார் திரவ இயந்திரமாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ராமன்-2 இயந்திரம் அதிக உந்துதல் திறன் கொண்டது மற்றும் விரைவில் சோதனைக்கு அனுப்பப்படும். இந்த நிறுவனம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டுள்ளது.

இது சமச்சீரற்ற டைமெதில்ஹைட்ராசின் மற்றும் நைட்ரஜன் டெட்ராக்சைடை அதன் உந்து சக்தியாக பயன்படுத்துகிறது. இது அதனை ஒரு ஹைபர்கோலிக் எஞ்சினாக மாற்றுகிறது. அதன் உட்செலுத்தி தட்டு முற்றிலும் 3டி முறையில் அச்சிடப்பட்டுள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் 3டி அச்சிடும் வரம்புகளை எஞ்சினுடன் அச்சிடப்பட்ட பிளம்பிங்குடன் தள்ளுகிறோம் என தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்நுட்பம் ராக்கெட் பொறியாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. ஏனெனில் இது ராக்கெட் பாகங்களை அடுக்காக உருவாக்கி சில நாட்களுக்குள் ஒழுங்கின்மையை சரிசெய்ய அனுமதிக்கிறது. வழக்கமான முறையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் இயந்திரம் வெடித்து விடும் வாய்ப்பு உள்ளது. பின்னர் அதனை புதிதாக தொடங்க வேண்டும்.

ஆனால் 3டி பிரிண்டிங் என்பது சேர்க்கை உற்பத்தி என அழைக்கப்படுகிறது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட லேசர் சின்டரிங் எனப்படும் செயல்முறையை உள்ளடக்கியது. ராமன் திரவ எஞ்சின் ஆகஸ்டு 20, 2020 அன்று முதன்முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Also Read: மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனத்தை விரைவில் சோதனை செய்ய உள்ள இஸ்ரோ..

ஸ்கைரூட் கூற்றின்படி, இந்த ராமன் வகை என்ஜின்கள் பல மறுதொடக்கம் செய்யும் திறன் கொண்டலை. இது விக்ரம்-1 ஏவுகணையில் செயற்கைகோள்களை ஒரே முறையில் பல சுற்றுப்பாதைகளில் செலுத்த உதவும். சமீபத்தில் விக்ரம்-1 ராக்கெட் நிலை கலாம்-100 யை நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

Also Read: விண்ணில் ஏவப்பட உள்ள இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1..?

கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்ட இந்த கலாம்-100, 108 விநாடிகள் எரியும் நிலையில் 10 டன்கள் உச்ச உந்துதலை வழங்க கூடியது. விக்ரம்-1 ஏவுகணை வாகனம் 480 கிலோகிராம் வரை குறைந்த சாய்வு சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை 24 மணி நேரத்திற்குள் எந்த ஏவுதளத்தில் இருந்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவும் திறன் கொண்டது.

Also Read: ககன்யான் திட்டத்திற்கான உலகின் மிகப்பெரிய பூஸ்டரை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரோ..

Leave a Reply

Your email address will not be published.