இந்தியாவில் காலிஸ்தானுக்கான வாக்கெடுப்பு அடுத்த வருடம் நடத்தப்படும்: காலிஸ்தான் தலைவர் அறிவிப்பு

தடைசெய்யப்பட்ட அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னு, பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காலிஸ்தான் தனி மாநிலத்திற்கான வாக்கெடுப்பு ஜனவரி 26, 2023 இந்திய குடியரசு தினத்தன்று நடத்தப்படும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் குர்பத்வந்த் சிங் பன்னு, காணொளி மூலம் லாகூர் பிரஸ் கிளப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் சீக்கியர்களுக்கான தனி நாடாக அங்கீகரிக்க பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த வருடம் இந்திய குடியரசு தினத்தன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

காலிஸ்தான் தலைநகராக சிம்லா இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை விடுவிக்க நடக்கிறது. ஜூன் 6, 1984 ல் இந்திரா காந்தி அரசாங்கம் தர்பார் சாஹிப்பை தாக்கி ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே மற்றும் அவரது ஆதரவாளர்களை கொன்றது என பன்னு கூறியுள்ளார்.

தர்பார் மீதான முதல் தாக்குதல் 1955ல் நடத்தப்பட்டது என்றும் அதன் விளைவாக காலிஸ்தான் உருவானது எனவும் பன்னு கூறியுள்ளார். பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளும் காலிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய பஞ்சாப் சுதந்திரம் அடையும் போது இந்த பகுதிகள் காலிஸ்தானில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க 27 மில்லியன் சீக்கியர்கள் தகுதி பெற்றுள்ளனர். காஷ்மிரின் சுதந்திரத்திற்கு இந்திய பஞ்சாபின் சுதந்திரம் முக்கியம் என பன்னு தெரிவித்துள்ளார்.

காஷ்மீரிகளை போன்று சீக்கியர்களுக்காக பாகிஸ்தான் குரல் எழுப்பி அவர்களுக்கு தார்மீக அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கான நேரம் இது என பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவையும் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் இந்திய பஞ்சாபை காலிஸ்தான் என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டும், இதன் மூலம் ஐநாவில் எங்கள் வழக்கு வலுப்பெறும் என பன்னு கூறினார்.

Also Read: புவிசார் அரசியல் தடைகளை கடந்து NSG குழுவில் இணைய இந்தியா ஆர்வமாக உள்ளது: ஜெய்சங்கர்

மோடி அரசு ஒரு பாசிச அரசு, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் எங்கள் வாக்கெடுப்பை நிறுத்த முயற்சித்தார்கள், அதேபோன்று இந்த இந்திய பஞ்சாப் வாக்கெடுப்பையும் நிறுத்த முயற்சிப்பார்கள். இங்கிலாந்தில் தகுதியான 800,000 வாக்காளர்களில் 200,000 வாக்குகளுக்கும் மேல் பதிவானதாக பன்னு தெரிவித்தார்.

Also Read: CDS மற்றும் RAW பதவிகளுக்கு ஜூன் மாதத்திற்குள் புதிய தலைவர்களை நியமிக்க உள்ள மோடி அரசு..

இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க காலிஸ்தானும் அவசியம். பொதுவாக்கெடுப்பு முடிந்தவுடன், சீக்கியர்களுக்காக குரல் எழுப்பவும், அதனை தனி நாடாக அங்கீகரிக்கவும் வழக்கை ஐ.நாவிற்கு எடுத்து செல்வோம். காலிஸ்தான் உருவான பிறகு உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்களை துன்புறுத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்குவதற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Also Read: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இருந்திருந்தால் நிலைமையே வேறு.. தெறிக்கவிட்ட பாப் லான்சியா

அதே நேரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள பாகிஸ்தான் அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சுதந்திரம் அடைந்ததும் பாலிஸ்தான் பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவில் அதிகார சமநிலையை மாற்றி, பிராந்தியத்திற்கு தேவையான ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பை கொண்டுவரும் என பன்னு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.