ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 2016 ஆம் ஆண்டு கூடுதலாக நான்கு P.1135.6 பிரிகேட் வகை கப்பல்களை கட்டமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் P.1135.6 வரிசையில் ஏழாவது போர்கப்பல் வியாழன் அன்று முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரஷ்யாவின் கலினின்கிராட்டில் யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் வியாழன் அன்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷ்ய மூத்த அதிகாரிகள் முன்னிலையில் போர்க்கப்பல் கடலில் ஏவப்பட்டது. இந்த P.1135.6 வகை கப்பலுக்கு ‘துஷில்’ என பெயரிடப்பட்டுள்ளது.

துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பான கேடயம் என பொருள். கூடுதலாக ஒப்பந்தம் போடப்பட்ட நான்கு கப்பல்களில் இரண்டு போர்கப்பல் ரஷ்யாவிலும், இரண்டு போர்கப்பல் இந்தியாவிலும் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த போர் கப்பலில் ‘ஸ்டீல்த் தொழிற்நுட்பம்’ உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் அடுத்த கப்பலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்கப்பலில் இந்திய மற்றும் ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன.

Also Read: தனது இரண்டாவது கடல் சோதனை பயணத்தை துவங்கியது IAC விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பல்..

இந்த போர்கப்பலில் ஏவுகணைகள், சோனார் சிஸ்டம், மேற்பரப்பு கண்காணிப்பு ரேடார், தகவல் தொடர்பு சாதனம் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரஷ்யாவின் வான்வழி ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளும் உள்ளன. கொரோனா தொற்றினால் கடுமையான சவால் இருந்தபோதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் போர்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளதாக பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.