முடிவுக்கு வரும் அமெரிக்காவின் டாலர்.. வளர்ந்து வரும் ரஷ்யாவின் ரூபிள்..

உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டாலர், தற்போது கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போரால் அதன் மதிப்பை இழந்து வருகிறது. விரைவில் டாலரின் சகாப்தம் முடிவுக்கு வர உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டாலரின் மதிப்பு சரிந்து வருவதாக ஜீரோ ஹெட்டேஜ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைனில் ரஷ்யா போரை தொடங்கிய பிறகு, பிடன் நிர்வாகம் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ரஷ்ய மத்திய வங்கியால் சேமிக்கப்பட்ட ரஷ்யாவின் அமெரிக்க டாலர் கையிருப்பு, அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

இதனால் பல நாடுகளுக்கு தற்போது டாலரின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. டாலருக்கு மாற்றாக மற்ற நாணயங்களை அந்தந்த நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. சீனா, இந்தியா, ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்களது நாணயங்களில் வணிகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன அல்லது ஏற்கனவே செய்து வருகின்றன.

தற்போது ரஷ்யா எரிவாயுவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், இராண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. மேலும் மரம், கோதுமை, உரம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் ரஷ்யா உள்ளது. இதுதவிர இரண்டாவது மிகப்பெரிய அலுமினிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய நிக்கல் மற்றும் நிலக்கரி ஏற்றுமதியாளராகவும் ரஷ்யா உள்ளது.

மேலும் சீனாவுக்கு பிறகு ரஷ்யா இரண்டாவது பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது. உலகின் 10 சதவீத பங்கை ரஷ்யா கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்குபவர்கள் ரஷ்ய நாணயமான ரூபிள், தங்கம் மற்றும் பிட்காயினில் பணம் செலுத்தி வருகின்றன. மேலும் ரஷ்யா, இந்தியா. சீனா மற்றும் பிற நாடுகளுடன் டாலர் அல்லாத பிற நாணயங்களில் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இதனால் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகை கொண்ட நாடுகள் டாலரை பயன்படுத்துவதை குறைத்து வருகின்றன.

Also Read: எகிப்தை தொடர்ந்து இந்தியாவிடம் கோதுமை கேட்கும் மேலும் 12 நாடுகள்..

இதனால் டாலரின் தேவை குறைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் கூட எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க டாலரை தவிர்த்து ரஷ்யாவின் ரூபிளை பயன்படுத்தி வருகின்றன. இதனால் ரூபிளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால் ரஷ்யா எண்ணெயை ஐரோப்பாவிற்கு ரூபிளில் விற்கும் நிலையில், இந்தியாவிற்கு ரூபாயிலும், சீனாவிற்கு யுவானிலும் விற்று வருகிறது.

Also Read: டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி..

மேலும் சீனா ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவீதத்தை டாலருக்கு பதிலாக சீன நாணயமாக யுவானில் வாங்குகிறது. சீனா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வாங்குபவர். மேலும் கொரோனா தொற்று பரவ தொடங்கிய போது அமெரிக்கா 4 டிரில்லியன் டாலர் பணத்தை அச்சடித்தது.

Also Read: இந்தியா 2026 ஆம் ஆண்டே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என IMF கணிப்பு..!

இது கடந்த 250 ஆண்டுகளில் அச்சடித்ததை விட அதிகம். இதனால் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் டாலரின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. ரஷ்யா மீது விதித்த தடை தற்போது அமெரிக்காவிற்கு எதிராகவே திரும்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.