மும்பை அருகே விமானந்தாங்கி கப்பலில் செங்குத்தாக தரை இறங்கிய போர் விமானம்..
மும்பை அருகே பிரிட்டன் ராயல் கடற்படை விமானந்தாங்கி கப்பலான HMS குயின் எலிசபெத் மீது ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F35B செங்குத்தாக தரையிரங்கியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே அரபிக்கடலில் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தின் போர்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் HMS குயின் எலிசபெத் விமானந்தாங்கி போர் கப்பலும் பங்கேற்றுள்ளன.
லாக்ஹீட் மார்டீன் தயாரித்த ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F35B விமானந்தாங்கி கப்பலின் ஓடுபதையில் செங்குத்தாக தரையிரங்கியுள்ளது. இந்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
இந்த ஐந்தாம் தலைமுறை விமானமானது, வானிலிருந்து வான், வானிலிருந்து தரை தாக்குதல், உளவு, மிண்ணனு போர் ஆகியவற்றில் ஈடுபட முடியும். கடந்த வாரம் முதல் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்திய கடற்பரப்பில் நுழைந்த போது “நமஸ்தே இந்தியா” என இங்கிலாந்து கடற்படை ட்வீட் செய்தது.
மே மாதம் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறுகையில், இந்தியா எங்களின் இன்றியமையாத பங்குதாரர் என கூறினார்.
Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..
நெதர்லாந்தின் HNLMS எவர்ட்சன் போர் கப்பலும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நெதர்லாந்தின் இந்தியா, பூடான், நேபாளத்தின் தூதரான மார்டென் வான் டென் பெர்க் கூறுகையில், இந்திய பெருங்கடல் ஐரோப்பியாவின் நுழைவு வாயில் ஆகும். இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.
Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..
NNLMS எவட்சன் கப்பல் மும்பைக்கு விஜயம் செய்வது நமது நீண்டகால உறவை உறுதிபடுத்துகிறது என கூறினார். மேலும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மார்டென் தெரிவித்தார்.
Also Read: இந்தியா அமெரிக்கா இடையே போர் பயிற்சி.. போர் பயிற்சியில் மெட்ராஸ் படை வீரர்கள்.. இலங்கையுடன் நிறைவு..