புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த இராணுவ அதிகாரி மேஜர் விபூதி சங்கர் துன்டியால் மனைவி நிதிகா கவுல் சென்னை இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்து இந்திய இராணுவத்தில் இணைந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் 40 CRPF வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலின் பிண்ணனியில் உள்ளவர்களை கண்டறியும் குழுவில் மேஜர் விபூதி சங்கர் துன்டியால் இடம் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாத குழுவின் ஜே.இ.எம் காமாண்டர் கம்ரானை மேஜர் விபூதி சங்கர் துன்டியால் தலைமையிலான குழு சுற்றிவளைத்தது. இந்த தாக்குதலின் முடிவில் பயங்கவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி அடைந்தது. இருப்பினும் இந்திய தரப்பில் மேஜர் விபூதி சங்கர் துன்டியால் உட்பட நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவரது வீரத்தை போற்றும் வகையில் சௌர்ய சக்ரத்தால் மேஜர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

மேஜர் விபூதி சங்கர் துன்டியால் மனைவி கூறுகையில், அவர் கடந்து வந்த அதே பயணத்தை நானும் தொடர்கிறேன். அவர் எப்பொழுதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பார் என நம்பிக்கை உள்ளது என நிதிகா கவுல் கூறினார்.

இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ள நிதிகா கவுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், லெப்டினென்ட்டாக நீங்கள் இந்தியாவின் நாரி சக்தியின் அர்பணிப்பு, உறுதிபாடு மற்றும் பக்தியின் உறுவமாக இருக்கிறீர்கள். உங்கள் தோளில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து மேஜர் விபூதி சங்கர் துன்டியால் மகிழ்ச்சியுடன் புன்னகைப்பார். உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றிப்பெற எனது வாழ்த்துக்கள் என ஸ்மிதி இராணி தெரிவித்துள்ளார்.

மேஜர் விபூதி சங்கர் துன்டியால் மற்றும் நிதிகா கவுல் தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒரே வருடத்தில் நிதிகா தனது கணவரை இழந்தார். பிறகு நிதிகா குறுகிய கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது பயிற்சியை தொடங்கினார். தற்போது பயிற்சி முடித்து இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட்டாக இணைந்துள்ளார். தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிதிகா கவுல் தனது கார்ப்ரேட் வேலையை விட்டுவிட்டு இராணுவத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *