ஜம்முவில் ஷெனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த உலகிலேயே மிக உயரமான பாலத்தின் பணி நிறைவடைந்தது..?

உலகிலேயே மிக உயரமான இரயில்வே மேம்பால பணிகளை இந்தியன் இரயில்வே வெற்றிகரமாக முடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஷெனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த வளைவு பகுதி நிறைவடைந்துள்ளது.

இது உலகிலேயே மிக உயரமான பாலம் ஆகும். ஈபிள் கோபுரத்தை விட 36 மீட்டர் உயரமானது இந்த பாலம். இதன் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட வளைவு பணி இன்று முடிக்கப்பட்டது. இதனை இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வீடியோ மூலம் பார்வையிட்டார்.

இந்த பாலத்தின் மூலம் உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதியின் தூரம் 111 கி.மீட்டராக குறையும். இந்த பாலத்தின் மொத்த செலவு 1486 கோடி ஆகும். இதில் 28,000 மெட்ரிக் டன் எஃகு, 66,000 கியூபிக் மீட்டர் கான்கிரீட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 266 கி.மீ வேகத்திலான காற்றையும் தாங்க கூடியது மற்றும் பூகம்பத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கிறது.

இந்த பாலம் இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதன் மூலம் துருப்புகளையும் விரைவாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த பாலம் 1315 மீட்டர் நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *