இன்று இந்தியா வரும் மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள்..?

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள். இந்த 3 ரபேல் போர் விமானங்களும் இன்று இரவு இந்தியா வர உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு 59,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி 5 தவணைகளாக 18 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த நிலையில் மேலும் 3 விமானங்கள் இந்தியா வருகிறது.

இந்த 3 விமானங்களையும் சேர்த்து மொத்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்கிறது. இவற்றை பஞ்சாப் விமானத்தளம் மற்றும் மேற்குவங்க விமான தளத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 36 ரபேல் விமானங்கள் மட்டுமில்லாமல் இந்தியாவின் தேஜஸ் விமானத்தை தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரபேல் விமானத்தை பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையோரம் கண்காணிப்பு பணிக்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமானம் இந்தியா வரும் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டு இந்தியா வருகின்றன. மீதமுள்ள அனைத்து விமானங்களும் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என பிரான்சின் ட்சால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *