இன்று இந்தியா வரும் மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள்..

ஏற்கனவே கூறியப்படி பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் வர உள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் 11 ரபேல் போர் விமானங்கள் உள்ள நிலையில் இதனுடன் சேர்த்து ரபேல் எண்ணிக்கை 14 விமானங்களாக உயரும்.

இரட்டை எஞ்சின் கொண்ட இந்த ரபேல் போர் விமானம் தாக்குதல், ரோந்து, உளவு, அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடுத்த முடியும். மேலும் ஹம்மர் ஏவுகணை இருப்பதால் வான் தாக்குதலும் நடத்த முடியும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 36 போர் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டது. இந்த ஆர்டர் இந்கியாவுக்கு கிடைக்க மிக முக்கியமானவர் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆவார். மேலும் அடுத்த மாதத்திற்குள் 50 சதவீத ரபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மூன்று ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என கூறப்பட்டிருந்தது. மேலும் அடுத்த மூன்று வாரத்திற்குள் மேலும் 7 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என பாதுகாப்பு அதிகரிகள் தெரிவித்தனர்.

அதன்படி இன்று முதல் மூன்று விமானங்கள் இந்தியா வருகின்றன. ஏற்கனவே இந்தியா வந்த விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைந்து சேவையில் உள்ளன. மேலும் இந்தியா சீனா மோதலின் போது ரபேல் விமானங்கள் சீன எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

கொரோனா தொற்று காலத்திலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே ரபேல் விமானங்கள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். பிரான்சில் இருந்து வரும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருள் நிரப்பப்படுகின்றன. இன்று வரும் ரபேல் போர் விமானங்கள் குஜராத்தில் தரை இறக்கப்பட்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *