AMCA ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் டைட்டானியம் உலோக கட்டிங் தொடங்கப்பட்டது..

இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.மாதவன், நாசிக்கில் உள்ள விமான உற்பத்தி பிரிவில் தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக 5 வது தலைமுறை AMCA விமானத்தின் டைட்டானியம் பல்க்ஹெட்க்கான உலோக கட்டிங் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஏ கே கோஷ், PD (AMCA) ADA, மற்றும் DMRI, ADA மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின்படி, AMCA இன் முதல் முன்மாதிரி விமானம் 2023 ஆம் ஆண்டிலும், முதல் விமானம் 2024 ஆம் ஆண்டிலும் வெளியிட்டப்பட உள்ளது. AMCA MK.-1 ஆனது 5.5 ஆம் தலைமுறை மற்றும் AMCA MK.-2 ஆறாம் தலைமுறை போர் விமானமாகும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், 2026-28 ஆம் ஆண்டிற்குள் உற்பத்தியை தொடங்க விரும்பும் நிலையில், முழு அளவிலான உற்பத்தி 2029 ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாம் தலைமுறை AMCA MK.-2 ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் சாஃப்ரான் இணைந்து உருவாக்க உள்ள 125 kn என்ஜினை கொண்டிருக்கும்.

இது அடுத்த 7-8 ஆண்டுகளில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட் (AMCA) போர் விமானம் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியால் (ADA) வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனங்களால் தயாரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.