அருணாச்சலின் ஹோலோங்கி விமான நிலையத்தில் வெற்றிகரமான சோதனை செய்யப்பட்ட டோர்னியர் விமானம்..

அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் இட்டாருக்கு அருகில் உள்ள ஹோலோங்கி கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் முதல் செயல்பட தயாராக உள்ளது. இதன் முதல் விமான சோதனை தலையிறக்கம் நேற்று செவ்வாய் அன்று நடைபெற்றுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த டோர்னியர் விமானம் நேற்று காலை 10.30 மணி அளவில் ஹோலோங்கி கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சோதனை இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நடத்தப்பட்டது. சீன எல்லையோரம் இந்த விமானநிலையம் அமைந்துள்ளதால் போர் சூழலில் இராணுவ தளமாகவும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

மாநில சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நாக நாலோ, சோதனை தரையிறக்கத்திற்கு பிறகு, விமானிகள், விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் பிற உள்கட்டமைப்புகளை பாராட்டினால். தற்போது தலைநகர் இட்டாநகருக்கு அருகில் எந்த விமான நிலையமும் இல்லை. அருகில் உள்ள விமான நிலையம் எனறால் அருணாச்சல் பிரதேச தலைநகர் இட்டாநகரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அசாம் மாநிலத்தின் வடக்கு லக்கிம்பூர் மாவாட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையம் தான் உள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஹோலோங்கி கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் தலைநகர் இட்டாநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் முதல் விமான சோதனை தரையிறக்கம் ஹோலோங்கி கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது, ஆகஸ்டு 15 முதல் பயணிகள் பயன்படுத்தலாம் என நாலோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தின் இறுதி கட்டுமானம் நவம்பர் மாதம் முடிவடைய இருந்த நிலையில், காலக்கெடுவிற்கு முன்பே ஜூலை மாதமே முடித்து விட்டதாக நாலோ தெரிவித்துள்ளார். 4,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையம் பயணிகளுக்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.

இந்த விமானநிலையத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் நிலையான நிலப்பரப்புடன் ஆற்றல் திறன் கொண்ட கட்டிடமாக இருக்கும். மேலும் விமானநிலையம் இயக்கப்பட்டதும் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான போயிங் 747 தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் ஏற்ற வகையில் 2,300 மீட்டர் ஒடுபாதையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், விருப்பம் உள்ள இடத்தில் ஒரு வழி இருக்கிறது. மற்றும் ஒரு ஓடுபாதை. பல ஆண்டுகளாக அருணாச்சல் பிரதேசம் நம்ப முடியாத சுற்றுலா திறன் இருந்தபோதிலும் விமான இணைப்பு இல்லாமல் இருந்தது. மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி எங்களிடம் விமான நிலையம் இருப்பதை உறுதி செய்துள்ளார். இன்று ஒரு நம்பமுடியாத புகழ்பெற்ற நாள். மக்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.