நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..
நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் P-8I விமானத்தில் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இருந்து MK 54 டார்பிடோக்கள் இந்திய விமானப்படை கௌள்முதல் செய்ய உள்ளது. இதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் 423 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உலகிலேயே சீனக்கடற்படை தான் மிக வலிமையான கடற்படையாக பார்க்கப்படுகிறது. சீனாவிடம் 2020 ஆண்டில் 360 கப்பல்களை கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இது 400 கப்பல்களாகவும், 2030 ஆம் ஆண்டில் இது 425 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா அமெரிக்காவுக்கு மட்டும் இல்லாமல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் உட்பட தென் சீனக்கடலில் உள்ள பல நாடுகளுக்கு அச்சுருத்தலாக உள்ளது. சீனாவை சமாளிக்க தற்போது இந்தியா அந்தமான் நிக்கோபார் தீவுகளை நவீனபடுத்தி வருகிறது.
மேலும் அமெரிக்க ஆஸ்திரேலியா இடையே அணுசக்தியில் இயங்கும் ஆறு நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு சீனா கணடனம் தெரிவித்து இருந்தது. காரணம் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களால் பல வருடங்கள் நீருக்கு அடியிலேயே இருக்க முடியும். இது சீனாவுக்கு சவாலாக இருக்கும்.
Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை
இந்தியாவும் அணுசக்தி மற்றும் டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் MK 54 டார்பிடோக்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த இலகுரக MK 54 டார்பிடோக்கள் 324 மிமீ நீளம் உடையது. இதனை அமெரிக்காவின் ரேதென் இன்டகிரேடட் டிபன்ஸ் சிஸ்டம் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதனை ஆழமான மற்றும் ஆழமற்ற என இரு இடங்களிலும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் நீருக்கு அடியில் உள்ள இலக்குகளை கண்காணிக்கவும், இலக்குகளை தாக்கி அழிக்கவும் முடியும்.
Also Read: பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக இணைந்த இந்தியா..
இதனை போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை கட்ம்ந்த ஆண்டு 16 ஆல் ரவுண்ட் லைட்வெயிட் MK 54 டார்பிடோக்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..