சீன யுவானில் வர்த்தகம்..!பாகிஸ்தான், சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது..?

பாகிஸ்தான் உடனான வர்த்தகம் முழுவதையும் சீனாவின் யுவான் மூலம் மேற்கொள்ளும் வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சீன மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை யுவானில் மேற்கொள்ளும் வகையில் சீன மற்றும் பாகிஸ்தானின் மத்திய வங்கிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீன மற்றும் பாகிஸ்தானின் வணிகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் சீனாவின் யுவான் நாணயத்தில் நடைபெறும்.

பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் அமெரிக்க டாலரில் எண்ணெய் வாங்கி வருகிறது. மேலும் சீனா யுவான் நாணயத்தில் ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தான் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் நிதி அமைச்சர், ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கும் அதே தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய வழங்கினால் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் என தெரிவித்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.