இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை..

இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் இராணுவம் மற்றும் சீனாவை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்படலாம்.

ஏப்ரல் 7 அன்று QUAD நாடுகளுக்கு இடையேயான லா பெருஸ் கடற்படை கூட்டு பயிற்சி முடிந்த உடன் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பு ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்க படுகிறது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ளுதல், இராணுவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யவ்ஸ் லு ட்ரையன் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் டென்மார்க் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் தென் சீனக்கடல் பிரச்சனை, பொருளாதாரம், வர்த்தகம், தொழிற்நுட்பம் உள்ளிட்ட பிரச்சனைகளும் விவாதிக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது. அதேபோல் சீனா ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *