பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது துருக்கி..?
துருக்கியில் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால் துருக்கி அரசு பாகிஸ்தானியர்களுக்கான விசா கொள்கையை கடுமையாக்கியுள்ளது. மேலும் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்குவதையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
செவ்வாய் அன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் நான்கு நேபாளிகள் தக்சிம் சதுக்கத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் 6 பேர் என அடையாளம் காணப்பட்டது. தக்சிம் சதுக்கத்தில் இருந்து கடத்தப்பட்ட நேபாளிகள் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டனர்.
நேபாளிகள் சித்ரவதை செய்யப்பட்டு அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் 10,000 யூரோக்கள் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர். துருக்கி போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கடத்தல்காரர்கள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
பிணைகைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நேபாளிகளை போலிசார் மீட்டனர். பின்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து கத்திகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பாகிஸ்தானியர்களும் 16 முதல் 35 வயதிருக்கும் என போலிசார் கூறியுள்ளனர்.
Also Read: முதன்முறையாக இந்தயாவிலேயே உருவாக்கப்பட்ட நேவிகேஷனை பயன்படுத்தி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..
இதேபோல் கடந்த ஆண்டு இஸ்தான்புல்லில் பாகிஸ்தானை சேர்ந்த நபர் சக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை கடத்தி சென்று விடுவிக்க வேண்டுமென்றால் 50,000 யூரோ கொடுக்க வேண்டுமென கூறினார். பின்னர் குற்றவாளியை போலிசார் கைது செய்தனர்.
இந்த மாதம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலநூறு பாகிஸ்தானியர்கள் துருக்கியில் போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் தூதரின் தலையீட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Also Read: டெல்லி ஜாமியா நகரில் 100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..?
துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா மற்றும் பிற இடங்களில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருகின்றனர். குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளதால் விசா நடைமுறையை துருக்கி அரசு கடுமையாக்கியுள்ளது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்குவதையும் துருக்கி அரசு நிறுத்தியுள்ளது.