பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பை வலுபடுத்த துருக்கி உதவும்: எர்டோகன்
பாகிஸ்தானின் இராணுவ கட்டமைப்பை வலுபடுத்த தேவையான அனைத்து உதவிகளையும் துருக்கி வழங்கும் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் பாகிஸ்தானின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்ட கப்பலின் வெளியிட்டு விழாவிற்கு அனுப்பப்பட்ட வீடியோ செய்தியில் எர்டோகன் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு நான்கு MILGEM வகை கப்பல்களை வாங்க துருக்கி அரசு நடத்தும் பாதுகாப்பு நிறுவனமாக ASFAT உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. திட்டத்திபடி, இரண்டு கொர்வெட்டுகள் துருக்கியிலும், இரண்டு கொர்வெட்டுகள் பாகிஸ்தானிலும் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இவற்றில் தொழிற்நுட்ப பரிமாற்றமும் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
மூன்றாவது கப்பலான பத்ர் கப்பலின் கட்டுமானம் கராச்சி கப்பல்துறையில் தொடங்கப்பட்டு தற்போது கடலில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மது இஸ்ரார் தரீன் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் துருக்கி அதிபர் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் வான் பாதுகாப்பு முதல் நீர்மூழ்கிகப்பல் பாதுகாப்பு வரை அனைத்து வகையான இராணுவ கப்பல்களின் விநியோகம் ஆகஸ்ட் 2023 முதல் முதல் ஆறுமாத இடைவெளியில் செய்யப்படும் என எர்டோகன் கூறினார். நான்காவது கப்பலுக்கு கைபர் என பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இஸ்தான்புல்லில் உள்ள துறைமுகத்தில் வெளியீட்டு விழா தொடங்கப்பட உள்ளது.
Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?
இந்த வீடியோவில் பேசிய எர்டோகன், துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளுக்கு இந்த திட்டம் மிகவும் உறுதியான மற்றும் சமீபத்திய எடுத்துகாட்டுகளில் ஒன்றாகும். பாகிஸ்தானுக்கும் அதன் மக்களுக்கும் எங்களுக்கு தனி இடம் உண்டு என எர்டோகன் தெரிவித்தார்.
Also Read: இலங்கையை தொடர்ந்து துருக்கியின் பணவீக்கம் 70% அதிகரிப்பு..
எர்டோகன் அவ்வபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். பிப்ரவரி 2020ல் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசினார். இரு நாடுகளுக்கும் இந்த விஷயம் முக்கியமானது என்பதால் துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கும் என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ISI உடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வதற்காக துருக்கி ஒரு பிரச்சார குழுவையும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: பாகிஸ்தானியருக்கு விசா வழங்குவதை நிறுத்தியது துருக்கி..?