காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு.. துருக்கி பிரதமர் எர்டோகன் அறிவிப்பு..
காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண தனது ஆதரவை துருக்கி பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என துருக்கி கூறியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் 3 நாள் பயணமாக துருக்கி சென்றுள்ள நிலையில், துருக்கி அதிபரும் பாகிஸ்தான் பிரதமரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எர்டோகன், அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான பாகிஸ்தானின் முயற்சிக்கு துருக்கி ஆதரவளிப்பதாக கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான நடத்தும் போராட்டத்தில் வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு முக்கியமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நாங்கள் 4 டன் மனிதாபிமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளோம். தொடர்ந்து ஆப்கனுக்கு ஆதரவளிப்போம்.
நாங்கள் கூட்டாக இணைந்து போர் கப்பல்களை தயாரித்துள்ளோம், இரண்டு துருக்கியிலும் இரண்டு பாகிஸ்தானிலும் தயாரிக்கப்பட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு முதன்முறையாக 1 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதனை 5 பில்லியனாக கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். எங்கள் வணிகர்களையும் முதலிட்டாளர்களையும் பாகிஸ்தானில் முதலீடு செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
Also Read: சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்தார். எர்டோகனுக்கு இந்திய அச்சுருத்தல் குறித்து நான் தெரிவித்தேன். அமைதிக்கான தனது தேடலை பாகிஸ்தான் கைவிடாது. காஷ்மிர் பிரச்சனை ஐநா சாசனம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பப்படி தீர்க்கப்பட்டால் மட்டுமே தெற்காசியாவில் நீடித்த அமைதியை அடைய முடியும் என ஷேபாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
Also Read: துருக்கியின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள்.. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துருக்கியுடன் பாகிஸ்தானும் நிற்கிறது. துருக்கியின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள் என ஷேபாஸ் ஷெரிப் கூறினார். இருநாடுகளுக்கு இடையிலான உறவு வரலாற்றில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது. எர்டோகன் தலைமையின் கீழ் இருநாட்டு உறவுகள் புதிய உயரத்திற்கு செல்லும் என நம்பிக்கை இருப்பதாக பாகிஸ்தான பிரதமர் கூறியுள்ளார்.
Also Read: இந்தியா சுதந்திரமாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்: இம்ரான்கான்