தகவல் தொழிற்நுட்ப விதிகளை செயல்படுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும் டிவிட்டர்..?

புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளை செயல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம்.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளை ஏற்றுக்கொண்டது. மேலும் பேஸ்புக் நிறுவனமும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஒரு சில விதிமுறைகளை மட்டும் மத்திய அரசுடன் விவாதிக்க உள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டூல்கிட் தொடர்பாக டெல்லியில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு பிறகு தனது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை படுவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுருத்தலாக இருப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது.

உலக அளவில் செயல்பட்டு வரும் எங்களது நிறுவனத்திற்கு காவல்துறையால் அச்சுறுத்தல் வருவது குறித்து டிவிட்டர் கவலை தெரிவித்துள்ளது. மேலும் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளை குறிப்பிட்டு பொருந்தக்கூடிய விதிகளை செயல்படுத்தவும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஈடுபடவும் முயற்சிப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது.

புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளுக்கு இணங்க தொழிற்நுட்ப அமைச்சகத்திடம் இன்னும் 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. மேலும் விதிகளில் கூறிய படி ஒரு அதிகாரியை நியமிப்பதற்கும் டிவிட்டர் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா காங்கிரஸ் கட்சியின் டூல்கிட்டை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதனை டிவிட்டர் ‘manipulated media’ என கூறி இருந்தது. பின்னர் டிவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலிசார் சோதனை மேற்கொண்டனர். Manipulated media என கூறியதாலயே சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து டூல்கிட் விவகாரத்தில் டிவிட்டரையும் டெல்லி போலிசார் சேர்த்துள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக விமர்சனம் செய்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *