காஷ்மீரின் குல்காமில் LeT அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது.

தெற்கு காஷ்மீரில் உள்ள செயன் தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

பின்னர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Also Read: ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆற்றலிருந்து இந்தியா விலக பிரான்ஸ் உதவும்..!

காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் கூறுகையில், கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவன் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஹைதர் என அடையாளம் காணப்பட்டது. மற்றொரு பயங்கரவாதி உள்ளூரை சேர்ந்தவன் என ஐஜிபி கூறியுள்ளார்.

Also Read: விமான பராமரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற தமிழக நிறுவனத்துடன் போயிங் ஒப்பந்தம்..

ஹைதர் வடக்கு காஷ்மீரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல பயங்கரவாத செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகினறனர்.

Leave a Reply

Your email address will not be published.