பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்கள்.

எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய விமானப்படைக்கு புதிதாக இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மிராஜ் 2000 போர் விமானங்களும் பிரான்சில் இருந்து மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானத்தளத்திற்கு வந்தடைந்துள்ளன.

இவை இரண்டும் பயிற்சி விமானங்கள் ஆகும். இந்த இரண்டு பயிற்சி மிராஜ் 2000 போர் விமானங்களும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தால் தற்போதைய தரத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட உள்ளது.

மிராஜ் 2000 போர் விமானங்களின் எண்ணிக்கையை சுமார் 50 ஆக உயர்த்தும் வகையில் இந்திய விமானப்படை புதிதாக இந்த இரண்டு மிராஜ் 2000 பயிற்சி விமானத்தை வாங்கி மேம்படுத்த உள்ளது. இதுவரை இந்திய விமானப்படை வெவ்வேறு காலக்கட்டத்தில் 51 மிராஜ் 2000 விமானங்களை வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவை அனைத்தும் குவாலியர் விமானதளத்தை அடிப்படையாக கொண்டு மூன்று படைப்பிரிவுகளாக நிலைநிறுத்தப்பட உள்ளன. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 51 மிராஜ் விமானங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த இரண்டு மிராஜ் விமானங்களிலும் போர் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான கருவிகளை வைத்து மேம்படுத்தப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள மிராஜ் விமானங்களுக்கான உதிரி பாகங்களுக்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

Also Read: ஆஸ்திரேலியா சென்றது அமெரிக்காவின் F-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானம்.. சீனாவுக்கு மேலும் நெருக்கடி..

பிரான்ஸ் மிராஜ் விமானத்தின் பாகங்கள் மூலம் இந்தியாவின் மிராஜ் விமானங்களை 2035 வரை பராமரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மிராஜ் போர்விமானம் 1980 முதல் சேவையில் உள்ளது. கார்கில் போர் முதல் 2019 பாலகோட் தாக்குதல் வரை மிராஜ் 2000 போர் விமானத்தின் பங்கு இன்றியமையாதது.

Also Read: இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானத்திற்கு அடுத்த வருடம் அனுமதி..?

Also Read: சீனாவுக்கு போட்டியாக சூர்யகிரண் விமானத்தை ஆளில்லா ட்ரோனாக மாற்ற உள்ள இந்திய இராணுவம்..?

Leave a Reply

Your email address will not be published.