ஆப்கன் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு..

திங்கள்கிழமை வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள சோதமை சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மிர் அலி பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். இருப்பினும் பாகிஸ்தான் வீரர்கள் ஜாகூர் கான்(20) மற்றும் ரஹீம் குல்(23) ஆகியோர் உயிரிழந்தனர்.

இதேபோல் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி வடக்கு வஜிரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 14 அன்று இஷாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்களது தளங்களை வைத்துள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் தங்களது தளங்களுக்கு திரும்பி விடுகின்றனர்.

Also Read: தைவான் மீது போர் தொடுக்க சீனா போட்ட திட்டம்.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு..

பாகிஸ்தானால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான்(TTP) மற்றும் ISIS போன்ற பயங்கரவாத அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் தங்களது தளங்களை கொண்டுள்ளனர். அங்கிருந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிடுகின்றனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 105 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Also Read: உலகளவில் வலிமையான விமானப்படை.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..

Leave a Reply

Your email address will not be published.