சத்தீஸ்கரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு..?

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு ராய்பூர் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் பலியாகினர். சத்தீஸ்கர் முதல்வர் இறந்த விமானிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் மானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமானநிலையத்தில் நேற்று இரவு 9.10 மணி அளவில் ஹெலிகாப்டர் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் பயிற்சியின் போது பலத்த காயமடைந்த இரண்டு விமானிகளையும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏ.பி.ஶ்ரீவஸ்தவா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக பிரசாந்த் அகல்வால் தெரிவித்துள்ளார்.

Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், விமானிகளின் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், ராய்பூரில் உள்ள விமான நிலையத்தில் மாநில ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் எங்கள் விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் ஶ்ரீவஸ்தவா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கடவுள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமையையும், அமைதியையும் தரட்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்..

Leave a Reply

Your email address will not be published.