குற்றச்செயலில் ஈடுபட்ட 19 இந்தியர்களை நாடுகடத்த UAE, சவுதி அரேபியா கோரிக்கை..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 இந்தியர்களை UAE மற்றும் சவுதி அரேபியாவுக்கு நாடுகடத்த இருநாடுகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்றுள்ளதாக CBI கூறியுள்ளது. இந்த 19 நபர்களும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

UAE மற்றும் சவுதி அரேபியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பியோடிய இந்திய பிரஜைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு அந்த இரு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக CBI புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சும் இந்தியாவும் இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை ஐக்கிய எமிரேட்சுக்கு நாடுகடத்த அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் CBI இந்த குற்றவாளிகள் மீது FIR பதிவு செய்துள்ளது. அந்த நாட்டின் விசாரணைக்காக வெளியுறவு அமைச்சகம் மூலம் UAE தூதரகத்தால் CBIக்கு இந்த கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்நாட்டு FIR அடிப்படையில் 2018-19 ஆம் ஆண்டு பதிவான 13 வழக்குகள் தொடர்பாக 15 இந்தியர்களை நாடுகடத்த UAE கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்குகளில் ஒன்று சத்தார் கானுக்கு எதிரான கொலை வழக்கு ஆகும். மற்றவை பணத்தை கொள்ளை அடித்த வழக்கு என கூறப்படுகிறது.

UAE அதிகாரிகளால் தேடப்படும் நபர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த ரஜனீஷ் தாஸ் என்பவர் ஆவார். இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றிய போது 1.5 மில்லியன் AED பணத்தை மோசடி செய்ததாக CBI வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் விற்பனை செய்த அலுமினிய துண்டுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Also Read: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு..

மற்றொரு வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த சவுகத் அலி என்பவருக்கு எதிராக CBI வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது. இவர் நிதி மேலாளராக பணி புரிந்த கட்டுமான நிறுவனத்தில் 1.4 மில்லியன் AED பணத்தை மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கில் அப்துல் ரஹ்மான், அப்துல் சமத் கமாலுதீன், அனிஷ் சோம்பாலன் ஆகியோர் மீது CBI வழக்கு பதிவு செய்துள்ளது.

Also Read: இந்தியாவில் 5 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பிறகு 21 பங்களாதேஷிகள் சொந்த ஊர் திரும்பினர்..

இந்த மூவரும் சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த ரஷீத் அம்மாஷ் அவாமி என்பவரின் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அம்மாஷ் 300,000 சவுதி ரியால் பணத்தை அந்த மூவரிடம் கொடுத்துவிட்டு தொழுகைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூவரும் மூன்று லட்சம் சவுதி ரியால்களை திருடி கொண்டு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளனர். UAE மற்றும் சவுதி அரேபிய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் மீது FIR பதிவு செய்து CBI விசாரித்து வருகிறது.

Also Read: சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறிய இந்தியா.. பின்னடைவில் பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.