சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா.. தனது ஒரே சர்வதேச விமானநிலையத்தை இழக்கிறது..

சீனாவின் கடன் பொறியில் சிக்கிய நாடுகளின் பட்டியலில் விரைவில் உகாண்டா சேர உள்ளது. அந்நாடு சீனாவிடம் வாங்கிய கடனுக்காக தனது ஒரே சர்வதேச விமானநிலையத்தை சீனாவிடம் பறிகொடுக்க உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் சீனாவிடம் 207 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு சீனா ஒப்புதல் அளித்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி உகாண்டா அரசுக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் (EXIM) இடையே 2 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடனை கட்டவேண்டிய காலம் 20 ஆண்டுகள் மற்றும் சலுகை காலம் 7 ஆண்டுகள் கொடுக்கப்பட்டது. கடனுக்கு ஈடாக என்டபே சர்வதேச விமானநிலையம் மற்றும் சில சொத்துக்களை உகாண்டா அரசு அடமானம் வைத்து சீனாவிடம் கடன் வாங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த உகாண்டாவுக்கு கொரோனா மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால் கடன்தொகை செலுத்தாததால் சீனா உகாண்டாவின் என்டபே சர்வதேச விமானநிலையத்தை கையகப்படுத்த உள்ளதாக தகவல் பரவியது. கடன் ஒப்பந்தத்திலும் விமானநிலையத்தை அடகு வைத்தே கடன் வாங்கப்பட்டது. இதனால் உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி ஒரு குழுவினரை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

விமானநிலையத்தை கையகப்படுத்தும் முடிவை மறுபரீசிலனை செய்யகோரி சீனாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த விதிகளை தளர்த்த முடியாது என சீனா கூறியதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த ஒப்பந்தத்தின் போது சர்வதேச விதிகளை கடைபிடிக்காததால் சர்வதேச அமைப்புகளின் உதவியையும் நாட முடியாத நிலையில் உகாண்டா உள்ளது.

இந்த 207 மில்லியன் டாலர் கடன் குளருபடிக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக உகாண்டா நிதியமைச்சர் மதியா கசாய்ஜா மன்னிப்பு கேட்டார். ஏற்கனவே பல ஆப்ரிக்க நாடுகள் கடனை கட்ட முடியாமல் சீனாவிடம் சரணடைந்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது உகாண்டா இணைந்துள்ளது.

Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..

Leave a Reply

Your email address will not be published.