இந்தியாவின் நடவடிக்கையால் பணிந்தது இங்கிலாந்து.. இந்திய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..

இங்கிலாந்து வரும் இந்திய பயணிகளுக்கு தனிமைபடுத்துதல் இனி கிடையாது என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 11 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கிகரித்த போதும் இந்தியா உட்பட சில நாடுகளை சேர்ந்தவர்களை இங்குலாந்திற்குள் வர அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து வரும் இந்திய பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்துவார்கள் என இங்கிலாந்து தெரிவித்து இருந்தது.

மேலும் இங்கிலாந்து அங்கீகரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியர்கள் போட்டிருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் என இங்கிலாந்து கூறியது. இதற்கு இந்தியா சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் முடிவு எட்டப்படவில்லை, இதனால் இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவித்து இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்தது. இதனால் தற்போது இந்திய பயணிகளுக்கு இனி தனிமைபடுத்துதல் இல்லை என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Also Read: தான் ஒருநாளும் பிரதமர் ஆவேன் என கனவிலும் நினைத்ததில்லை: பிரதமர் மோடி

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் கோவாக்சின் தடுப்பூசிக்கு UN இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த வாரத்திற்குள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Also Read: அமெரிக்கா சீனா இடையே போர் வரலாம்: முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

இந்த நிலையில் இங்கிலாந்து அரசு அங்கீகரித்த தடுப்பூசி பட்டியலில் கோவீஷீல்டு இருந்தும் இந்தியர்களுக்கு தனிமைபடுத்துதலை அறிவித்ததால் இந்தியாவும் பதிலடிக்கு இங்கிலாந்து பயணிகளுக்கு தனிமைபடுத்துதலை அறிவித்திருந்தது.

Also Read: இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அதிபர் ராஜபக்சே

Leave a Reply

Your email address will not be published.