உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

உக்ரைன் ரஷ்ய மோதலால் எரிவாயு தடைபட்டதால், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பிய யூனியன் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு ஜெர்மன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஐரோப்பாவிற்கு ரஷ்யாவில் இருந்து உக்ரைன் வழியாக குழாய் மூலம் எரிவாயுவை வழங்கும் நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு எரிவாயு இந்த கம்ப்ரசர் நிலையத்தின் வழியாக தான் செல்கிறது.

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையம் ஐரோப்பாவிற்கு தினமும் 32,6 மில்லியன் கனமீட்டர் ரஷ்ய எரிவாயுவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இந்த அறிவிப்பு ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனால் பொருளாதார இழப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.

இதனால் நோவோப்ஸ்கோவ் கம்ப்ரசர் நிலையத்திற்கு மாற்றாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு செய்துள்ளது. ஆனால் இதனை செயல்படுத்த ஜெர்மனி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மொத்த ஐரோப்பாவையும் பாதிக்க கூடும். ரஷ்ய எரிபொருள் தடையால் பல நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க தயக்கம் காட்டுகின்றன.

நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) என்பது 1,230 கிலோமீட்டர் நீளமுள்ள நீருக்கடியில் உள்ள இரட்டை குழாய் திட்டம் ஆகும். இது பால்டிக் கடலுக்கு அடியில் இரட்டை குழாய் வழியை பின்பற்றி ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் ஆண்டுக்கு 110 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை இயக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் உக்ரைனுக்கு செலுத்தப்படும் போக்குவரத்து கட்டணம் சேமிக்கப்படும்.

Also Read: அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்..?

ஜெர்மனி இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா ஜெர்மனிக்கு எரிபொருள் அளவை குறைத்துள்ளது. இந்த புதிய தடைகள் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஹங்கேரி போன்ற நாடுகள் தடைகளை வீட்டோ செய்ய முடிவு செய்துள்ளன.

Also Read: எரிசக்தி டெண்டர்: மயான்மரில் சீனாவின் இடத்தை கைப்பற்றிய ரஷ்யா..?

ரஷ்யாவின் ரூபிளில் பணம் செலுத்துவதற்கு பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஜெர்மன் அதிபரும் மக்கள் ஆதரவை இழந்து வருவதால் தடையில் இருந்து பின்வாங்குகிறது. மேலும் தற்போதைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவை விட்டால் எரிபொருளுக்கு வேறு வழி இல்லை. ரஷ்ய எரிபொருளில் செயல்படுவது போன்றே பெரும்பாலான ஐரோப்பிய தொழில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் ரஷ்யா மீதான தடையை குறைத்து நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை செயல் படுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவை விமர்சித்த ஜி7 நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.