ரஷ்யாவின் அதிநவீன எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பை கைப்பற்றிய உக்ரைன்..?

ரஷ்யா உடனான போரில் உக்ரேனிய படைகள் ரஷ்யாவின் க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. உக்ரைன் படைகள் கைப்பற்றியதிலேயே இந்த ஆயுதம் தான் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் (EW) அமைப்பு உக்ரைன் தலைநகர் கிய்வின் புறநகர் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பானது முதன்மையான வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் மற்றும் உளவு செயற்கைக்கோள்கள் போன்ற பெரிய ரேடார்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும்.

இந்த க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் கன்டெய்னர் தலைநகருக்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் இரண்டு அமைப்புகளை கொண்டது. ஒன்று எலக்ட்ரானிக் வார்ஃபேர் உபகரணங்களுடன் கூடிய அமைப்பு மற்றொன்டு கட்டளை இடுகை தொகுதியுடன் கூடியது ஆகும்.

இந்த இரண்டு அமைப்பும் 8×8 KAMAZ-6350 டிரக்கை அடிப்படையாக கொண்டது. இதேபோல் மற்றொரு க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரஷ்ய படைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.க்ராசுகா-4 என்பது ரஷ்யாவில் உள்ள KRET நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பு ஆகும்.

Also Read: அர்ஜுன் MK-II டாங்கியை வாங்க பஹ்ரைன் ஆர்வம்..? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை..!

இது 150-300 கிலோமீட்டர் சுற்றளவில் லோ-எர்த் ஆர்பிட் உளவு செயற்கைக்கோள்கள், தரை அடிப்படையிலான ரேடார்கள் மற்றும் வான்வழி ரேடார்களை முடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் எதிரியின் எலக்ட்ரானிக் வார்ஃபேர் அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளையும் செயலிழக்க வைக்கும் என கூறப்படுகிறது.

பல்வேறு தரை அடிப்படையிலான மற்றும் வான்வழி கண்காணிப்பு மற்றும் இமேஜிங் ரேடார்கள் மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்ட புலனாய்வு சேகரிக்கும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றிலிருந்து தரையிலும் வானிலும் உள்ள ரஷ்ய சொத்துக்களை பாதுகாக்கும் விதமாக இந்த க்ராசுகா-4 எலக்ட்ரானிக் வார்ஃபேர் உருவாக்கப்பட்டது.

Also Read: ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது: ஜோ பிடன்

தற்போது இது உக்ரைன் கையில் சிக்கியுள்ள நிலையில் இதனை அமெரிக்கா கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த அமைப்பு எதிரியின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யா இதனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.