நேட்டோவில் இணையபோவதில்லை.. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அதிபர் அறிவிப்பு..?

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோவில் சேரும் முடிவை கைவிட்டுள்ளதாகவும், மோதலை தவிர்க்க அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் கூறியுள்ளார். இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போர் ஆரம்பித்தபோது உக்ரைன் தன்னைத்தானே காத்துகொள்ளும் என்றும், அந்த திறன் உக்ரைன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் இருப்பதாக கூறினார். பின்னர் உக்ரைன் தனித்து விடப்பட்டதாகவும், உக்ரைன் மக்களும் ராணுவமும் ரஷ்ய ராணுவத்திற்கு கடுமையான பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறினார்.

பின்னர் 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த நிலையில், ரஷ்ய படைகளுக்கு எதிராக போராட யார் வேண்டுமானாலும் வரலாம் என கூறினார். போரில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்கப்படும் எனவும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

இதனால் அனைவரிடமும் ஆயுதம் வந்ததால் நாட்டில் கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல் அதிகமாகி விட்டதாக செய்திகள் அடிப்பட்டன. தன்னுடைய அரசாங்கம் ஒருபோதும் ரஷ்யர்களுக்கு முன்னால் சமரசம் செய்யவோ, பின்வாங்கவோ, தலைகுனியவோ மாட்டோம் என கூறினார். கடைசி மூச்சு இருக்கும் வரை தனது அரசாங்கம் போராடும் என அதிபர் கூறினார்.

ஆனால் தற்போது ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்ற உள்ள நிலையில் நேட்டோவுடன் இணையபோவதில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவால் தனி நாடாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்கள் பற்றியும் பேசி தீர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அளித்த பேட்டியில், நேட்டோ உக்ரைனை ஏற்க தயாராக இல்லை. ரஷ்யா உடனான மோதலுக்கு ரஷ்யா பயப்படுகிறது. ரஷ்யா உடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் கிரிமியா மற்றும் டான்பாஸ் குறித்தும் ரஷ்யாவுடன் விவாதிக்க உள்ளதாக அதிபர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.