அடையாளம் தெரியாத விமானங்கள் தாலிபான்கள் மீது தாக்குதல்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்..

அடையாளம் தெரியாத 2 விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தாலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்ச்ஷீர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் விமானப்படையின் விமானங்கள் பஞ்ச்ஷீர் தலைவர்களின் முக்கிய இடம் மற்றும் வீடுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக வடக்கு கூட்டணியின் தலைவர் அஹ்மத் மசூர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத 2 விமானங்கள் தாலிபன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அடையாளம் தெரியாத விமானம் எந்த நாட்டுடையது என தெரியவில்லை.

ஆனால் முன்பு வடக்கு கூட்டணியை ஆதரித்த அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், ஈரான், தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு இந்த தாக்குதல்களை நிகழ்த்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆப்கனில் ஆட்சி அமைக்க போகும் தாலிபன்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. பஞ்ஷீர் மகாணத்தில் வடக்கு கூட்டணியை ஒழிக்க பாகிஸ்தான் இராணுவ உதவியையும், சீனா சாட்டிலைட் உதவியையும் தாலிபான்களுக்கு வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிற்கு அருகில் உள்ள தஜ்கிஸ்தனில் இந்தியாவின் இரன்ணுவ தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.