மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 37 வங்கதேசத்தினரை கைது செய்த உ.பி. போலிசார்..
உத்திரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) நடத்திய அதிரடி நடவடிக்கையில், மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் குல்ஷன் காலனியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 37 வங்கதேச பிரஜைகளை போலிசார் ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.
உத்துரபிரதேச ATS போலிசார் நவம்பர் 10 அன்று போலியான பாஸ்போட்டை தயாரித்து சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு குடியேற்றும் மோசடி வேலையை செய்துவந்த இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிள் ஒருவன் பஞ்சாபை சேர்ந்த விக்ரம் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த ரத்தன் மண்டல். இந்த கமிஷன் ஏஜென்டுகளிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி மஃபிசுல் ரஹ்மான் என தெரியவந்தது.
போலியான பாஸ்போர்ட் தயாரித்து சட்டவிரோத குடியேற்ற மோசடியில் ஈடுபடும் முக்கிய குற்றவாளி மஃபிசுல் ரஹ்மானை பிடிக்க உத்திரபிரதேச ATS குழு கொல்கத்தா விரைந்தனர். அங்கு கொல்கத்தா போலிசார் உதவியுடன் அனந்தபூரின் குல்ஷன் காலனியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து 37 வங்கதேசத்தினரை போலிசார் கைது செய்தனர்.
37 பேரும் மதரஸா நடத்தும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட், இந்திய அடையாள அட்டை மற்றும் விசாக்களை போலிசார் கைப்பற்றினர். மேற்கு வங்கத்தில் இதுபோல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்வது வழக்கமான ஒன்று என்றாலும் ஒரே நேரத்தில் 37 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என கூறப்பட்டுள்ளது.
Also Read: பங்களாதேஷ் பயங்கரவாதியை மேற்குவங்கத்தில் அதிரடியாக கைது செய்தது NIA..
இவர்களுடன் ரஹ்மானையும் கைது செய்த போலிசார் அனைவரையும் லக்னோ அழைத்து செல்லப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் மதரஸா குடியிருப்பில் 45 நாட்களுக்கு முன்பு குடியேறியதாகவும், இவர்கள் எல்லையை கடப்பதற்கு முஃபிசுல் ரஹ்மான் உதவி செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை மேற்குவங்க பாஜக வரவேற்றுள்ளது. மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தா நகரின் மக்கள் தொகையை வங்கதேசமாக மாற்றி வருவதாக மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் குற்றம் சாட்டி உள்ளார்.
Also Read: மேற்குவங்கத்தில் பரபரப்பு.. பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் சுட்டுக்கொலை..
மேலும் அவர் கூறுகையில், இந்த சட்டவிரோத வங்கதேச குடியேறியவர்கள் பற்றி கொல்கத்தா நகர காவல்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத்திற்குரிய நபரை தேடி உத்திரபிரதேச ATS குழுவினர் வந்த பிறகே சட்ட விரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தா பங்களாதேஷில் இருந்து ஊடுருவுபவர்களுக்கு புகலிடமாக மாறி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற வங்களா தேசத்தினரை திரிணாமுல் கட்சி குடியமர்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கைது பற்றி ஞாயிற்றுகிழமை மாலை வரை திரிணாமுல் கட்சியினர் எதுவும் கூறவில்லை. மேலும் கொல்கத்காவில் டிசம்பர் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்கக்கது.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..