அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன டெலிகாம் நிறுவனங்களுக்கு தடை.. அமெரிக்கா அதிரடி..

அமெரிக்கா சீனா இடையே மோதல் அதிகரித்து வருவதால் அமெரிக்க அரசுக்கு சொந்தமான மூன்று முக்கியமான கேரியர்களில் ஒன்றான சைனா டெலிகாம் லிமிடெட் பிரிவை அமெரிக்க சந்தையில் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது பங்குசந்தையில் மதிப்பிடப்பட்ட சில பங்குகளில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதித்தார். அதில் ஒன்று தான் சைனா டெலிகாம் லிமிடெட். இதனை தற்போது ஜோ பைடன் செயபடுத்தி வருகிறார். அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) கடந்த செவ்வாய் அன்று ஒரு உத்தரவை வெளியிட்டது.

அந்த உத்தரவில், சைனா டெலிகாம் லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுத்தி வரும் உள்நாடு மற்றும் வெளிநாடு சேவைகளை 60 நாட்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த டெலிகாம் நிறுவனம் மூலம் சீன அரசு அமெரிக்கர்களை ஒட்டு கேட்கலாம் அல்லது தகவல் திருட்டில் ஈடுபடலாம் என FCC தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனம் உளவு வேலைகளிலும் ஈடுபடலாம் என கூறியுள்ளது. சீனா டெலிகாம் நிறுவனம் மட்டும் அல்லாமல் சீன அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான சைனா யூனிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்ப பெறப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..

நிர்வாகத்தின் செயல்பாடு வெளிப்படையாக இல்லாததால் சைனா டெலிகாம் நிறுவனம் சீன அரசோடு தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொலை தொடர்பு நிறுவனங்கள் இராணுவ வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக பென்டகன் கூறியதை அடுத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read: சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..

Leave a Reply

Your email address will not be published.