துருக்கி தயாரித்த தாக்குதல் ஹெலிகாப்டரை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா எதிர்ப்பு..?

துருக்கி அதன் ATAK-12 தாக்குதல் ஹெலிகாப்டரை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏனெனில் ஹெலிகாப்டரின் எஞ்சின் உரிமையை அமெரிக்கா வைத்துள்ளது. இந்த தடையை நீக்க துருக்கி அமெரிக்காவுக்கு தனது குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

இந்த ATAK-12 ஹெலிகாப்டர் அனைத்து வானிலையிலும் செயல்படும், இரட்டை எஞ்சினுடன் கூடிய மல்டி ரோல் தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும்.

மேலும் ஹெலிகாப்டர் துப்பாக்கிகளுக்காக துருக்கியும் பாகிஸ்தானும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த தடையால் ஹெலிகாப்டரை டெலிவரி செய்ய முடியாமல் துருக்கி தவித்து வருகிறது.

இந்த ஹெலிகாப்டரில் அமெரிக்காவின் பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளதால் அமெரிக்கா துருக்கிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் இது ஆகஸ்டா A129 முங்குஸ்டா ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் சீனா அல்லது வேறொரு நாட்டிடம் இருந்து ஹெலிகாப்டரை வாங்கும் என தெரிகிறது. துருக்கி ரஷ்யாவிடம் இருந்து S 400 ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்ததால், அமெரிக்கா இந்த தடையை விதித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *