ஆஸ்திரேலியா சென்றது அமெரிக்காவின் F-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானம்.. சீனாவுக்கு மேலும் நெருக்கடி..

ராயல் ஆஸ்திரேலிய விமானப்படைக்கு அமெரிக்கா மேலும் மூன்று F-35A விமானங்களை டெலிவரி செய்துள்ளது. ஆஸ்திரேலியா மொத்தம் 72 F-35A போர் விமானங்களை 2014 ஆம் ஆண்டு ஆர்டர் செய்தது. இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலிய விமானப்படைக்கு மேலும் மூன்று போர் விமானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவை சுற்றி கடல்பரப்பு இருப்பதாலும், சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் போக்காலும் ஆஸ்திரேலியா பிரான்சிடம் செய்த டீசல் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலுக்காக அமெரிக்காவிடம் ஆர்டர் கொடுத்தது. இதேபோல் இதற்கு முன்பு ஆர்டர் கொடுக்கப்பட்ட F-35A விமானத்தில் 3 தற்போது ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று விமானத்தையும் தனது 77வது ஸ்குவாட்ரானில் ஆஸ்திரேலியா இணைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன் அவை எல்ஜியின் தளத்தில் நவம்பர் 1 முதல் நவம்பர் 5 வரை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த மூன்று விமானங்களும் புளோரிடாவில் உள்ள எல்ஜின் விமானப்படை தளத்தில் இருந்து ஹவாய் வழியாக ஆஸ்திரேலியாவின் வில்லியம்டவுன் விமானப்படை தளத்தில் வந்து இறங்கியது.

ஆஸ்திரேலியா முதலில் F-35A ஆர்டர் செய்து இருந்தாலும் பின்னர் F-35B மற்றும் F-35C வாங்குவது குறித்து பரீசிலிக்கப்பட்டது. ஆனால் F-35A வை விட மற்ற இரண்டு விமானங்களும் விலை உயர்ந்தவை என்பதால் F-35A விமானத்தை வாங்குவது இறுதி செய்யப்பட்டது. கிழக்கு பசுபிக் நாடுகளில் F-35A போர் விமானம் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளிடம் உள்ளன. இதனால் சீனாவுக்கு மெலும் நெருக்கடி அதிகரிக்கும்.

Also Read: சீனாவுக்கு போட்டியாக சூர்யகிரண் விமானத்தை ஆளில்லா ட்ரோனாக மாற்ற உள்ள இந்திய இராணுவம்..?

F-35A போர் விமானம் மற்ற விமானங்களை போலவே விமான ஓடுதளத்தில் புறப்பட்டு தரையிறங்கும் தன்மை கொண்டது. அதன் ஏர்ஃபிரேமில் அதிக ஜி-லோடுகளை தாங்கும் திறன் கொண்டது. ஒற்றை இருக்கை மற்றும் ஒற்றை எஞ்சின் கொண்டது. விமானத்தின் வெற்று எடை 13,154 கிலோகிராம், எரிபொருள் 8,278 கிலோகிராம், ஆயுதங்கள் 8,160 கிலோகிராம், புறப்படும் எடை அதிகபட்சமாக 31,800 கிலோ எடையை கொண்டது.

Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது.

ஆனால் F-35B போர் விமானம் F-35A போர் விமானம் போல் இல்லாமல் இதற்கு ஓடுபாதை தேவையில்லை. F-35B போர் விமானம் செங்குத்தாக தரையிறங்கி செங்குத்தாகவே பறக்கும் திறன் கொண்டது. இதற்காக F-35B போர் விமானத்தில் ஷாப்ஃட் ட்ரைவன் லஃப்ட் ஃபேன் மற்றும் எஞ்சினுடன் த்ரஸ்ட் வெக்டரிங் முனை பொருத்தப்பட்டுள்ளது. F-35C போர் விமானம் மடிக்க கூடிய இறக்கையை கொண்டது. இந்த ஐந்தாம் தலைமுறை விமானங்களை அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read: ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?

Leave a Reply

Your email address will not be published.