பாகிஸ்தான் நேஷ்னல் வங்கிக்கு 55 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா..!
அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் நேஷனல் பாகிஸ்தான் வங்கிக்கு (NBP) 55 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேஷனல் பாகிஸ்தான் வங்கியின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
பாகிஸ்தான் அரசின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க ஆப் பாகிஸ்தானின் துணை நிறுவனமான நேஷ்னல் பாகிஸ்தான் வங்கி அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் போர்டு வியாழன் அன்று பணமோசடி எதிர்ப்பு மீறல்களுக்காக பாகிஸ்தானின் நேஷனல் வங்கிக்கு 20.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் அமெரிக்க வங்கி செயல்பாடுகள் நியூயார்க் கிளைக்கு இணங்க மறுத்ததால் நியூயார்க் மாநில நிதி சேவை துறை நேஷனல் பாகிஸ்தான் வங்கிக்கு 35 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. பெடரல் ரிசர்வ் போர்டு மற்றும் நியூயார்க் மாநில நிதி சேவைகள் ஆகிய இரண்டும் பாகிஸ்தான் நேஷனல் வங்கிக்கு மொத்தமாக 55 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளன.
இந்த 55 மில்லியன் டாலர் அபராதத்தை செலுத்த பாகிஸ்தான் நேஷனல் வங்கி ஒப்புகொண்டுள்ளது. இதனாவ் வங்கியின் பங்குகள் 7 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான நேஷனல் பாகிஸ்தான் வங்கியின் 75.20 சதவீத பங்குகள் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானது.
ஏற்கனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒவ்வொரு நாடாக சுற்றி வரும் நிலையில் இந்த அபராதம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் பணமோசடியால் 2018 ஆம் ஆண்டு முதல் நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது.
தற்போது பணமோசடியில் சிக்கியதால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் மற்றொரு பெரிய வங்கியான HBL, இதேபோன்று பணமோசடி தடுப்பு சட்டங்களுக்கு இணங்காததற்காக 630 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அபராதம் குறைக்கப்பட்டு 225 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புகொண்டது.