ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ள அமெரிக்கா..?

கடந்த வாரத்தில் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் மிகைவ் போபோவ் ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து, ஐரோப்பிய, ஆசிய நாடுகளை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது பல நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து 43 சதவீதம் அளவிற்கு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு 100,000 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்து வருகிறது. இது 2020 ஆம் ஆண்டு 72,608 மில்லியன் பீப்பாயாக இருந்தது.

Also Read: இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் டீசல் அனுப்பிய இந்தியா..?

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் 19 முதல் 25 வரை 43 சதவீதம் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது. இது தவிர ரஷ்யாவிடம் இருந்து கனிம உரங்களையும் அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. கனிம உரங்களை அத்தியாவசிய பொருட்களாக வகைப்படுத்தி அதனை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது.

இதன் மூலம் உக்ரைனை தாக்க அமெரிக்கா மறைமுகமாக நிதி அளிக்கிறதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த வாரம் இந்தியா வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பயணம் குறித்து அமெரிக்கா விமர்சித்து இருந்தது. சீனா உடன் பிரச்சனை என்றால் ரஷ்யா வராது.

Also Read: இந்தியாவிற்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு..

நடுநிலையாக செயல்படுவதை தவிர்த்து அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில் ஒரு பக்கம் ரஷ்யா மீது மற்ற நாடுகளை பொருளாதார தடை விதிக்க வைத்து, தற்போது அமெரிக்கா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.