மியான்மரில் அமெரிக்க பத்திரிக்கையாளருக்கு 11 ஆண்டுகள் சிறை.. அமெரிக்கா எதிர்ப்பு..

மியான்மரில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவருக்கு மியான்மர் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதற்கு பத்திரிக்கை சங்கம், அமெரிக்கா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஆங் சாங் சூகியின் வெற்றியை ஏற்க மறுத்து ஆட்சியை கவிழ்த்தது இராணுவம்.

பின்னர் இராணுவம் அட்சியை கைப்பற்றிய நிலையில் பிப்ரவரி மாதம் ஆங் சாங் சூகி மற்றும் அதிபர் யு வின் மியின்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டு காவலில் அடைத்தது. அதனை தொடர்ந்து இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இராணுவத்திற்கு எதிராக செய்தி எழுதியதாக 100 பத்திரிக்கையாளர்களை கைது செய்து 30 பேரை சிறையில் அடைத்தது. இந்த நிலையில் ஃபிரான்டியர் செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அமெரிக்க பத்திரிக்கையாளரான பென்ஸ்டர் என்பவரை மே மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது மியான்மர் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மேல் வன்முறையை தூண்டும் பதிவு மற்றும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படும்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை..

பென்ஸ்டர் மியான்மர் நவ் பத்திரிக்கையில் இருந்து ஃபிரான்டியர் செய்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இராணுவ ஆட்சியை விமர்சித்து அவர் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

இதற்கு அமெரிக்கா, பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் செய்தி நிறுவனத்தின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் சீனா இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மரில் செயல்படும் சீன தொழிற்சாலை மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

Also Read: சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது டீசல் தட்டுப்பாடு..

Leave a Reply

Your email address will not be published.