தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..
தென்சீனக்கடலில் சென்று கொண்டிருந்த சீன நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா பராமரிப்பு காரணங்களுக்காகவே நீர்மூழ்கி கப்பல் சென்றதாக கூறியுள்ளது.
தைவான் ஜலசந்தியில் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகப்பல் ஒன்று மேற்பரப்பிற்கு வந்து சீன கடற்படை தளத்தை நோக்கி சென்றது. அதே நேரம் அதே கடற்பரப்பில் அமெரிக்காவின் ரோந்து விமானம் ஒன்றும் சென்றுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது சீன நீர்மூழ்கி கப்பல் தாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
USNI கட்டுரையாளரும் இராணுவ நிபுணருமான HI சுட்டன் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல்-2 செயற்கைகோளால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் கப்பலின் மேற்பரப்பு, எழும் முறை, வட்டமான மற்றும் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் அது சீனாவின் துணை வகை-094 ஜின் வகுப்பு SSBN அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த நீர்மூழ்கி கப்பல் சீன தீவான ஹைனானின் தெற்கு கடற்கரையில் உள்ள யூலின் கடற்படை தளத்திற்கு வடக்கே இந்த நீர்மூழ்கி கப்பல் பயணித்துள்ளது. அணுசக்தியில் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பல் போஹாய் கப்பல் கட்டும் தளத்திற்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு அடிக்கடி சென்று வருவதால் அதற்காக சென்று இருக்கலாம் என சுட்டன் கூறினார்.
சீனாவின் சிந்தனை குழுவான SCSPI கூறுகையில், AE6832 என்ற விமான பதிவு எண் கொண்ட P-8A அமெரிக்க ரோந்து விமானம் திங்கள் அன்று தைவான் ஜலசந்தி வழியாக பறந்ததாக கூறியுள்ளது. ஜப்பானின் மிசாவா தளத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் தைவானை ஒரு வட்டம் அடித்து விட்டு மீண்டும் தளத்தை நோக்கி சென்று உள்ளது.
Also Read: ஆஸ்திரேலியா சென்றது அமெரிக்காவின் F-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானம்.. சீனாவுக்கு மேலும் நெருக்கடி..
தைவான் கடற்படையின் முன்னாள் கேப்டன் லு லி ஷிக் கூறுகையில், சீன நீர்மூழ்கி கப்பலை கண்காணிக்க அமெரிக்காவின் P-8A விமானம் தைவான் மேற்பரப்பில் பறந்திருக்கலாம். இருப்பினும் சீன நீர்மூழ்கிகப்பல் வெறுமனே பராமரிப்புக்காக மட்டும் போஹாய் கப்பல் கட்டும் தளத்திற்கு திரும்புவதாக நான் நினைக்கவில்லை என கூறினார்.
Also Read: இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானத்திற்கு அடுத்த வருடம் அனுமதி..?
கடந்த மாதம் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலான USS கனெக்டிகட், தென்சீனக்கடலில் சென்ற போது கடலுக்கு அடியில் உள்ள மலை மீது மோதியது. பின்னர் பழுது பார்ப்புக்காக கடலுக்கு மேற்பரப்பில் மிதந்தவாறு அமெரிக்காவின் குவாம் தீவுக்கு சென்றது. மலை மீது மோதியதாக அமெரிக்கா கூறினாலும் அந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை சீனா தாக்கியதால் தான் கடற்படை தளத்திற்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் திரும்பியதாக வதந்தி பரவியது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Also Read: சீனாவுக்கு போட்டியாக சூர்யகிரண் விமானத்தை ஆளில்லா ட்ரோனாக மாற்ற உள்ள இந்திய இராணுவம்..?