2 நாடுகளுடன் இணைந்து அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்க உள்ள அமெரிக்கா..?

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா நட்பு நாடுகளுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது இரண்டு முறை ஹைப்னர்சோனிக் ஏவுகணையால் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அடுத்து ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் எதிர்கொள்ள அமெரிக்கா நட்பு நாடுகளுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து “ஆகஸ்” என்ற பாதுகாப்பு கூட்டணி ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் தென்சீனக்கடல் மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதாகும்.

Also Read: மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. 3 பயங்கரவாதிகளிடம் இருந்து 12 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்..

சீனாவை எதிர்கொள்ள ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பு ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று தற்போது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து ஆகஸ் என்ற பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளன.

எந்தவொரு வான் பாதுகாப்பு தடுப்பாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்க இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. அமெரிகாவும் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகா மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்..!

இந்தியாவும் ஹைப்பர் கிளைடு வாகனத்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பை விரைவு படுத்துமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சமீபத்தில் கூறியிருந்தார். ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது. ஆகஸ் கூட்டணியால் சீனாவுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.