உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்க உள்ள அமெரிக்கா..

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திங்களன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிடன், உக்ரைனுக்கு தேவையான வான் பாதுகாப்பு அமைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

அமெரிக்கா ஜனவரி முதல் உக்ரைனுக்கு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் கடந்த வாரம் அதிபர் புதின் உக்ரைனுக்கு 625 மில்லியன் டாலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்குவதாக அறிவித்தார். இதில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ், பீரங்கி அமைப்புகள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு அதிபர் பிடன் இரங்கல் தெரிவித்தார்.

மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட தன்னை தற்காத்துகொள்ள தேவையான அனைத்து உபகரணங்களும் உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என அதிபர் உறுதி அளித்தார். கிரிமியா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தை உக்ரைன் தாக்கியதை அடுத்து திங்கள் அன்று தலைநகர் கீவ் உட்பட பல உக்ரைன் நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published.