இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

அமெரிக்கா இந்தியாவில் இராணுவ தளம் அமைக்க உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த இராணுவ தளத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை தாக்க உள்ளதாகவும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தபோது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடவடிக்கை எடுக்க அதன் அண்டை நாடுகளில் இராணுவ தளத்தை அமைக்க உள்ளது என கூறி இருந்தார்.

இந்த நிலையில் தான் அமெரிக்கா காஷ்மீரில் அமெரிக்கா இராணுவ தளத்தை அமைக்க உள்ளது அல்லது இந்திய இராணுவ தளத்தை பயன்படுத்த உள்ளது என சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவேளை காஷ்மீரில் அமைந்தால் அது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

மேலும் இதற்கான பேச்சுவர்த்தை இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ரகசியமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா பாகிஸ்தான் உட்பட ஆப்கானிஸ்தான் அருகில் இருக்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயன் இல்லாததால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா இந்தியாவில் உள்ள இராணுவ தளத்தை பயன்படுத்தாது. ஆனால் இந்தியாவின் இராணுவ தளத்தை பயன்படுத்தும் என தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்தியாவிற்கு சொந்தமாக தஜிகிஸ்தானில் ஒரு விமானத்தளம் (Farkhor Air Base) உள்ளது. அந்த விமான தளத்தின் மூலம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா தஜிகிஸ்தானிடம் அவர்களது விமானதளத்தை பயன்படுத்தி கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் ரஷ்யாவின் எதிர்ப்பால் அமெரிக்காவின் கோரிக்கையை தஜிகிஸ்தான் நிராகரித்துவிட்டது. தஜிகிஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடாகும். தஜிகிஸ்தானில் ரஷ்ய வீரர்களும் ரஷ்யாவுக்கு சொந்தமான இராணுவ தளங்களும் உள்ளன.

இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு சொந்தமாக தஜிகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்க இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை தஜிகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தை பயன்படுத்தி கொள்ள இந்தியா அனுமதித்தால் அதனை தஜிகிஸ்தானால் நிராகரிக்க முடியாது.

தஜிகிஸ்தான் இராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள இந்தியா சட்ட ரீதியாக அனுமதிக்க முடியும். மேலும் இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பாக 3 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் LEMOA என்ற ஒப்பந்தம் மூலம் அமெரிக்க இராணுவ தளத்தை இந்தியாவும், இந்திய இராணுவ தளத்தை அமெரிக்காவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

இரண்டாவது ஒப்பந்தம் COMCASA ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இராணுவ தகவல் தொடர்பை பகிர்ந்து கொள்வது. மூன்றாவதாக BECA, இது புவியியல் தொடர்பான ஒப்பந்தம். இதன் மூலம் புவி காந்த மற்றும் ஈர்ப்பு தரவு, வரைபடங்கள், கடல் மற்றும் வானூர்தி வரைபடங்கள் மற்றும் வணிகம் போன்ற மற்ற தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் ஆகும்.

Also Read: கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?

இந்த LEMOA ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் இராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள முடியும். தற்போது இது தொடர்பாகவே அமெரிக்கா இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பதிலுக்கு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 உள்ளிட்ட இராணுவ தடவாளங்களை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கூடாது என நிபந்தனை விதிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விமானத்தளம் குறித்து இந்திய தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.