சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம் இன பெண்..

சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக உய்கூர் முஸ்லீம் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீனாவில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதலங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேரா ஜா என்ற பெண் சீனாவின் ஜின்ஜியாங் மகாணத்தில் உள்ள உய்கூர் முகாமில் வாட்ஸ் அப் பதிவிறக்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பெண் சிம் கார்டு வாங்குவதற்காக தனது முகவரியை கொடுத்கதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வரும் வேரா ஜாவின் தனது “சீனாவின் உயர் தொழிற்நுட்ப குற்றவியல்” என்ற புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சீனாவில் உய்கூர் முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளன.

Also Read: போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..

மேலும் தனது பள்ளி ஜிமெயில் கணக்கை திறந்து VPN பயன்படுத்தியதற்காகவும் வேரா ஜாவின் கைது செய்யப்பட்டதாகவும், இதனால் தான் மீண்டும் முகாமுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இணைய சட்டத்தின் படி தங்களின் தனிப்பட்ட விவரங்களை சீன அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA.. பாய்ந்தது UAPA..

ஆறு மாதத்திற்கு பிறகு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டதாக வேரா தெரிவித்துள்ளார். சீனாவின் இணைய பாதுகாப்பு சட்டத்தில் பலர் குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை பயங்கரவாதிகளாக அடையாள படுத்தப்பட்டுள்ளனர். சீனாவின் முகாம்களில் கிட்டதட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான உய்கூர் முஸ்லிம் இன மக்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: அருணாச்சல் எல்லையில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே பயங்கர மோதல்..

Leave a Reply

Your email address will not be published.