உய்கூர் மனித உரிமை மீறல்.. ஐ.நா சபையின் 50 உறுப்பு நாடுகள் சீனாவுக்கு எச்சரிக்கை..!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லீம்கள் மற்றும் மற்ற பிற சிறுபான்மையினரை சீன அரசு துன்புறுத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் 50 உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தொழில் கல்வி , பயிற்சி மையங்கள் அல்லது மறு கல்வி முகாம்கள் என்ற பெயரில் சீனா, உய்கூர் முஸ்லிம்கள் மற்றும் திபெத்தியர்கள் போன்ற சிறுபான்மையினரை பயங்கரவாதிகளை குறிவைப்பது போன்று போர்வையில் விதிமீறல்கள் நடந்துள்ளன என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) மதிப்பீடு சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததை உறுதி படுத்தியுள்ளன. ஜின்ஜியாங்கில் உய்கூர்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லீம்கள் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுது, சர்வதேச குற்றங்கள், குறிப்பாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

OHCHR மதிப்பீட்டின் படி, சீனா இதுவரை தனது குற்றங்களை விவாதிக்க மறுத்துவிட்டதால் கவலை கொள்வதாகவும், சீன அரசாங்கம் அதன் சர்வதேச மனித உரிமைகள் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தவும், OHCHR மதிப்பீட்டின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளன.

OHCHR பரிந்துரைகளில், ஜின்ஜியாங்கில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள உய்கூர் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினரை உடனடியாக விடுவிக்கவும், காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை தெளிவுப்படுத்தவும், பாதுகாப்பான தொடர்பு மற்றும் மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கான வசதி ஆகியவற்றை OHCHR தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

ஐ.நா உறுப்பு நாடுகள் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வது, அதனை சரிசெய்ய உரையாடலில் ஈடுபடுவது மற்றும் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பாக சீனா மீது சிறப்பு கவனம் செலுத்த ஐ.நா முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.