விசாகப்பட்டினம் P15B நாசகார போர்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது

இந்திய கடற்படை அதன் முதல் P15B Stealth guided-missile destroyer எனும் நாசகார போர்கப்பலை கடற்படையில் இணைத்துள்ளது. இந்த இணைப்பு வியாழன் அன்று நடைபெற்றதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த போர்கப்பல் இந்திய கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 15B என அழைக்கப்படும் இந்த விசாகப்பட்டினம் வகை கப்பல்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு கையொப்பம் ஆனது.

நான்கு கப்பல்கள் கட்டமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொல்கத்தா நாசகார போர்கப்பலான P15A கப்பலின் தொடர்ச்சியே இந்த P15B கப்பலாகும். இந்த நான்கு கப்பல்களுக்கும் நாட்டின் நான்கு முக்கிய நகரங்களான விசாகப்பட்டினம், மோர்முகாவ், இம்பால் மற்றும் சூரத் நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த போர்கப்பல் 163 மீட்டர் நீளமும், 8,900 டன் எடையும், 30 நாட் வேகத்திலும் செல்லக்கூடியது. இந்த நான்கு போர் கப்பல்களும் 35,800 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இந்த கப்பலில் 50 அதிகாரிகள் மற்றும் 250 மாலுமிகள் இருப்பார்கள்.

Also Read: DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய நீண்ட தூர வெடிகுண்டு சோதனை வெற்றி..

இந்த போர்கப்பலில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பிரமோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நில தாக்குதல் ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்களும் உள்ளன. இதில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதியும் உள்ளன.

கொல்கத்தா கப்பலை விட பல மேம்பட்ட உந்துவிசை இயந்திரங்கள், பல ஆயுதங்கள், மேம்பட்ட தொழிற்நுட்பங்கள், சென்சார்கள் மற்றும் மேம்பட்ட ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த போர் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also Read: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

Leave a Reply

Your email address will not be published.