ஜிகாதிகளிடம் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்துக்களுக்காக தொடர்பு எண்களை வெளியிட்ட விஷ்வ இந்து பரிஷத்..

இஸ்லாமிய ஜிகாதிகளின் அச்சுறுத்தலின் கீழ் உள்ள இந்துக்களுக்கு உதவ பல்வேறு மாநிலங்களுக்கான பஜ்ரங் தள் ஜூலை 8 ஆம் தேதி உதவி எண்களின் பட்டியலை வெளியிட்டது. முதல் பட்டியலில் சேர்க்கப்படாத மீதமுள்ள மாநிலங்களுக்கான எண்கள் விரைவில் வெளியிடப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில். அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது ஜிகாதிகளால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் எங்கள் பஜ்ரங் தள் தொடர்பு எண்களையோ அல்லது அந்தந்த பகுதிகளையோ அணுகலாம். மற்ற மாநிலங்களுக்கான எண்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உத்திரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம், பஞ்சாப், லடாக், கர்நாடகா, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், ஆந்திரபிரதேசம், மத்தியபிரதேசம், அசாம், மகாராஷ்ட்ரா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ஜூலை 6 ஆம் தேதி, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சுரேந்திர ஜெயின் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் இஸ்லாமிய ஜிகாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வரும் இந்துக்களுக்கு உதவுவார்கள் என அறிவித்தார். மேலும் தொடர்பு எண்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விஷ்வ இந்து பரிஷத் ஜூலை 8 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களுக்கான தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. சமூகவலைத்தலங்களில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு இஸ்லாமிய ஜிகாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்துக்களுக்கு உதவ விஷ்வ இந்து பரிஷத் உதவி எண்களை அறிவித்துள்ளது.

நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக கடந்த ஜூலை 28 ஆம் தேதி இந்து தையல்காரர் கன்ஹையா லால் உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக ஜூலை 21 ஆம் தேதி அமராவதியில் உமேஷ் கோல்ஹே என்ற வேதியியலாளர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் பலருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.