உக்ரைன் ரஷ்யா இடையே போர்: திடீர் என ரஷ்யாவிற்கு சென்ற இஸ்ரேல் பிரதமர்..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் திடீர் பயணமாக ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது.

உக்ரைன் கேட்டுக்கொண்டதன் பேரில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் சனிக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றார். அங்கு நஃப்தலி பென்னட் மற்றும் அதிபர் புதின் இடையே மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இஸ்ரேலிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இஸ்ரேல் நட்புறவை கொண்டுள்ளது. உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாகவும், உக்ரைனில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை மீட்பது தொடர்பாகவும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதின் உடனான சந்திப்பிற்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நஃப்தலி பென்னட் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஸ்கோல்ஸை உடனான பேச்சுவார்த்தைக்காக ஜெர்மன் புறப்பட்டார் நஃப்தலி பென்னட்.

இஸ்ரேலில் குறிப்பிட்ட அளவு சோவியத் யூனியன் நபர்களும் வசிக்கின்றனர். இஸ்ரேலின் அண்டை நாடான சிரியாவில் பெரிய இராணுவ நடமாட்டத்தை கொண்டுள்ள ரஷ்யாவுடன் சூமூகமான பாதுகாப்பு ஓத்துழைப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது. இதனால் இஸ்ரேல் சிரியாவில் தாக்குதல் நடத்தும்போது அதனை ரஷ்யா கண்டுகொள்வதில்லை.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மாஸ்கோவிற்கு செல்வதற்கு முன் நஃப்தலி பென்னட் மற்றும் புதின் உடனான சந்திப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளதாக எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள நிலையில், அகதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அடுத்த வாரம் மருத்துவ குழு ஒன்றை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.