இந்தியா நேபாளம் இராணுவம் இடையே போர் பயிற்சி.. இந்தியா வந்த நேபாள் வீரர்கள்..

இந்தியா மற்றும் நேபாளம் இராணுவம் இடையே போர் பயிற்சி இன்று முதல் தொடங்கியது. இரு நாட்டு இராணுவத்தினரிடையே நடைபெறும் இந்த “சூரிய கிரண்” போர் பயிற்சி இன்று தொடங்கி அக்டோபர் 3 வரை 15 நாட்களுக்கு நடைபெறும்.

இந்த போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக நேபாள் இராணுவ வீரர்கள் சனிக்கிழமை இந்தியா வந்தடைந்தனர். இந்த் போர் பயிற்சி உத்ரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பேரிடர் மீட்பு ஆகியவை மேற்கொள்ளபடும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பயிற்சி தொடக்க விழாவில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எஸ் மஹால், பரஸ்பர நம்பிக்கை மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள இந்த போர் பயிற்சி உதவும் என கூறினார். இந்த போர் பயிற்சிக்கு இருநாட்டு இராணுவ வீரர்களின் சார்பிலும் 650 வீரர்கள் பங்குபெறுகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் இந்தியா ஷாங்காய் போர் பயிற்சியில் பங்கேற்றது. SCO எனக்கூறப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆறாவது பதிப்பில் இந்தியா பங்கேற்றது. இந்த SCO அமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன.

Also Read : பாகிஸ்தானின் போர் விமானத்தை வாங்க உள்ள அர்ஜென்டினா..? எந்த விமானம் தெரியுமா..?

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் மோதல் போக்கு இருந்ததால் கடந்த முறை நடைபெற்ற போர் பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இந்த முறை இந்தியா தனது வீரர்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. SCO போர் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல், தொடர்பு, மீட்பு போன்றவை இந்த பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்டன.

Also Read : மிராஜ் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்.. புதிதாக 350 போர் விமானங்கள்..

Leave a Reply

Your email address will not be published.