இந்தியா அமெரிக்கா இடையே போர் பயிற்சி.. போர் பயிற்சியில் மெட்ராஸ் படை வீரர்கள்.. இலங்கையுடன் நிறைவு..

இந்திய மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து EX YUTH ABHYAS 21 என்ற இராணுவ பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுடன் கடல் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் அமெரிக்காவில் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

இந்தப்பயிற்சி அலெஸ்காவின் எல்மெண்டோர்ப் ரிச்சர்ட்சனில் நடைபெற உள்ளன. இந்த போர் பயிற்சி துவக்க விழாவில் அலெஸ்காவின் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரையன் ஜப்லர் இந்திய வீரர்களை முறைபடி வரவேற்றார். துவக்க விழாவின் போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்த போர் பயிற்சியில் இந்திய இராணுவத்தின் 7 மெட்ராஸ் காலாட்படை பட்டாலியன் குழுவின் 350 வீரர்கள் போர் பயிற்சி மேற்கொள்கின்றனர். அமெரிக்க தரப்பில் 40வது குதிரைப்படை பிரிவின் 300 வீரர்கள் போர் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சி இந்த மாதம் 15 முதல் 29 வரை நடைபெறுகிறது.

14 நாட்கள் நடைப்பெறும் இந்த போர் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, மீட்பு, தொழிற்நுட்பம் குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த போர் பயிற்சி ஒருவருக்கொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், தகவல்கள் மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Also Read: ராய்பூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 6 CRPF வீரர்கள் காயம்..

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்துக்கு இடையேயான மித்ரா சக்தி கூட்டு போர் பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு இராணுவ தளபதி எம் எம் நரவனே ஐந்து நாள் சுற்று பயணமாக இலங்கை சென்றார். அங்கு இலங்கை பிரதமர், அதிபர், இலங்கை ராணுவ தளபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also Read: ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு..

மேலும் இலங்கை இராணுவ தலைமையகத்தையும் எம் எம் நரவனே பார்வையிட்டார். கஜாபா இராணுவ தலைமையகம் மற்றும் இராணுவ பயிற்சி மையத்தையும் நரவனே பார்வையிட்டார். 12 நாட்கள் நடைப்பெற்ற இந்த கூட்டு பயிற்சியின் கடைசி நாளான இன்று நரவனே கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்தியா தொடர்ந்து இராணுவ பயிற்சி மேற்கொள்வது சீனாவுக்கு விடுக்கும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்..

Leave a Reply

Your email address will not be published.