பணத்திற்காகவே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்றோம். பொது நலனுக்காக அல்ல: இம்ரான்கான்
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த ஞாயிற்றுகிழமை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு மந்திரிகள் கவுன்சிலின் 17வது அமர்வை வெற்றிகரமாக நடத்தியதற்காக பின்னர் ஏற்பாடு செய்திருந்த வெளியுறவு அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இம்ரான் கான் உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 ஆண்டுகால பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்த பாகிஸ்தானின் முடிவுக்கு பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்தார். அது “சுய காயம்” என்றும் பணத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு, பொது நலனுக்காக அல்ல என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளாக போரில் பாகிஸ்தான் பங்கேற்றதை விமர்சித்த கான், 2001 ஆம் ஆண்டில் அப்போதைய இராணுவ ஜெனரல் பெர்வேஸ் முஷாரப், பயங்கரவாதத்தின் மீதான போரின் ஒரு பகுதியாக மாற முடிவு செய்த போது, முடிவெடுப்பவர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறினார்.
முடிவின் பின்னால் என்ன பரிசீலனையில் இருந்தது என்பதை நான் நன்கு அறிவேன். துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் மக்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சோவியத்- ஆப்கானிய போரை குறிப்பிட்டு, 1980 களில் நாங்கள் ஆப்கன் போரில் பங்கேற்றபோது எல்லாம் இருந்ததை போலவே இருந்தன என கூறினார்.
Also Read: சீன உயிரி தொழிற்நுட்பம் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. முற்றும் மோதல்..
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒரு ‘சுய காயம்’ என குறிப்பிட்ட இம்ரான், இந்த முடிவிற்கு வேறு யாரையும் குறை கூற முடியாது, நாம் தான் பொறுப்பு என கூறியுள்ளார். மேலும் மற்றவர்கள் எங்களை பயன்படுத்திகொள்ள அனுமதித்தோம், உதவிக்காக நமது நாட்டின் நற்பெயரை தியாகம் செய்தோம், பொது நலனுக்கு எதிராக பணத்திற்காக வெளியுறவு கொள்கையை உருவாக்குகிறோம் என இம்ரான்கான் கூறினார்.
Also Read: இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை..
20 ஆண்டுகால போரின் விளைவாக பாகிஸ்தான் 80,000க்கும் மேற்பட்ட வீரர்களையும், 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகளையும் சந்தித்ததாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பற்றி குறிப்பிட்ட இம்ரான்கான், உலகம் தாலிபான்களின் ஆட்சியை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதன் 40 மில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.