என்றும் மக்களுடன் இருந்து மாநிலங்களை காப்போம்.. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். என்றும் மக்களுடன் இருந்து மாநிலத்தை காப்போம், பேரிடர் காலத்தில் மக்களை காப்பதே அரசின் தலையாய கடமை என கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய தனது கடிதத்தில், தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை பெருக்குவதில் வடகிழக்கு பருவமழைக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் உபரி நீர் அதிகமாகிவிட்டது.

வழக்கத்தை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் தனது அரசு முன்கூட்டியே வடிகால்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது. அதனால் தான் 2015 ஆம் ஆண்டு போல் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 6 ஆம் தேதி இரவு விடிய விடிய மழை பெய்தது. 7 ஆம் தேதி அதிகாலை முதல் பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தேன்.

உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்கரவிட்டேன். அமைச்சர்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், பொறியாளர்கள், வருவாய் துறை அதிகாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

சென்னை போலவே மற்ற மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்தேன். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்களை நேரில் சந்தித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். டெல்டா மாவட்டங்களில் தாளடி, சம்பா உட்பட நெற்பயிற்கள் தண்ணீரில் மூழ்கின என்ற செய்தி கிடைத்ததும் அமைச்சர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டேன்.

கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் கடைமடை வரையில் செல்லும் வகையில் 65 கோடி ரூபாய் செலவில் 4000 கிலோ மீட்டர் செலவுக்கு ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாறப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.