இந்தியாவில் சிறந்த பொழுதுபோக்கிற்கான கடற்கரைகள் எவை.? விவரம் இதோ..

இந்தியாவில் சிறந்த 5 கடற்கரை பற்றி பார்க்கலாம். இந்த கடற்கரைகள் ஓய்வு எடுக்க மற்றும் பொழுதுபோக்கிற்கு சிறந்த இடமாக விளங்குகிறது. இந்தியாவில் பல கடற்கரைகள் உள்ளன. அவற்றில் இருந்து பொழுதுபோக்கிற்கான சிறந்த 5 கடற்கரைகளை தேர்வு செய்துள்ளோம்.

முதலாவது பாகா கடற்கரை, கடற்கரைக்கு பெயர் பெற்ற கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை. இந்த கடற்கரைக்கு பேருந்து வசதி அடிக்கடி உள்ளது. இங்கு வாட்டர் சர்பீங், பாராஜெய்லிங் போன்ற விளையாட்டுகளும் உள்ளன. மேலும் சூரிய குளியலுக்கு சிறந்த இடம்.

கடற்கரை அருகிலேயே ஹோட்டல் மற்றும் விடுதிகள் அதிக அளவில் உள்ளன. பொழுதுபோக்கிற்கு பாகா கடற்கரை சிறந்த இடம். மேலும் இந்த கடற்கரைக்கு அருகிலேயே மேலும் பல கடற்கரைகள் உள்ளன. இது அமைதியாக பொழுதை போக்குவோருக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு செல்லலாம்.

இரண்டாவதாக காலங்குட் கடற்கரை, இதுவும் கோவாவில் தான் அமைந்துள்ளது. கோவாவில் பிரபலமான கடற்கரையில் காலங்குட் கடற்கரையும் உண்டு. இங்கும் வாட்டர் சர்பீங், பாராஜெய்லிங் போன்ற விளையாட்டுகளும் உள்ளன. பொழுதுபோக்கிற்கு சிறந்த இடம். இது பனாஜி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அருகில் உணவகங்கள் மற்றும் கடைகள் உள்ளன.

மூன்றாவது அக்ஸா கடற்கரை, இது மும்பையில் அமைந்துள்ளது. இது அமைதியான மற்றும் தூய்மையான கடற்கரையில் அமைந்துள்ளது. பொழுதுபோக்கிற்கு சிறந்த இடம். கடற்கரை அருகிலேயே உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இது மலாட் இரயில்வே நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், போரிவலியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

நான்காவதாக கோவளம் கடற்கரை, இது கேரளாவில் அமைந்துள்ளது. இதுவும் அமைதியான மற்றும் தூய்மையான கடற்கரை ஆகும். இயற்கையான சூழலுடன் இதனை கண்டு ரசிக்கலாம். வழி நெடுகிலும் தென்னை மரங்கள் இருப்பது கடற்கரைக்கும் மேலும் அழகு சேர்க்கின்றன. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

ஐந்தாவதாக சென்னை மெரினா கடற்கரை, இது சென்னையில் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை. அருகில் கலங்கரை விளக்கம், அண்ணா நினைவிடம், நேப்பியர் பாலம் போன்றவை உள்ளன. இங்கு நீச்சல் குளமும் உள்ளது. இங்கும் உணவகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரைக்கு கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, தாம்பரம், பிராட்வே என பல பகுதியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.